தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் கொள்கை அளவில் தீர்மானம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ள தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பதாக கொள்கை அளவில் தீர்மானம் எடுத்திருக்கின்றோம் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்(Suresh Premachandran)தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் கிளிநொச்சி(kilinochchi) மாவட்டத்திற்கான நிர்வாக தெரிவு, கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று (25.05.2024) நடைபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர்
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ளும் பலம் மிக்க கட்சியாக எமது கட்சி உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ள தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பதாக கொள்கை அளவில் தீர்மானம் எடுத்திருக்கின்றோம். சிவில் சமூக அமைப்புக்களும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர்.

அத்துடன், யுத்தம் முடிந்து பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் பதவியேற்கும் ஜனாதிபதிகளும் பாராமுகமாக இருக்கின்றனர்.
சிங்கள தலைவர்களும் வெளிநாடுகளும் புரிந்து கொள்வதற்கு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil wickremesinghe), ஏற்கனவே வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கிய வேலைத்திட்டங்களையே திறந்து வைக்கின்றார்.

எனினும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை விடுத்து, வாக்கை பெறும் நோக்கிலேயே வடக்கிற்கு வருகை தந்துள்ளார்”என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கலந்துரையாடலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி, மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 

 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        