தேர்தல் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் விளக்கம்
நாட்டின் தற்போதைய நிலையில் 22ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவது மக்கள் மத்தியில் தேர்தல் நடக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் நேற்று (21.07.2024) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு தேவைப்படும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனாலும், தேர்தலை தள்ளிப்போட ஜனாதிபதி முயற்சி எடுக்கிறாரா என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |