ரணில் போட்டி அறிவிப்பை வெளியிடவேண்டும்: ஆவேசமாக கோரிய அமைச்சர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் வாரத்திற்குள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடவேண்டும் என்று அமைச்சர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று(21.07.2024) கடவத்தையில் இடம்பெற்ற பேரணியின் போது இந்த வலியுறுத்தலை ஆவேசமாக விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பு
ஏற்கனவே சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
எனினும், பிரசாரங்களை உத்தியோகபூர்வமற்ற வகையில் ஆரம்பித்து ரணில் விக்ரமசிங்க இதுவரை தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்தநிலையில்,“கம்பஹா மக்கள் உங்கள் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். எனவே நீங்கள் போட்டியிடும் விருப்பத்தை அறிவிப்பதில் தயவு செய்து இனியும் தாமதிக்க வேண்டாம்" என அமைச்சர் ரணதுங்க, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
