போதை வியாபாரத்தின் முக்கிய புள்ளிகளை கைது செய்ய மறுக்கும் அரசு - சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம்

Sri Lanka Police Ranil Wickremesinghe Drugs
By Kajinthan Dec 24, 2023 03:33 PM GMT
Report

இரண்டு கோடியே 20 லட்சம் மக்கள் வாழக்கூடிய இலங்கை தீவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போதைப்பொருள் வியாபாரத்திலும் பாவனையிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயமாக இருக்கின்றது என ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் இன்றையதினம் (24.12.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரமாக இலங்கையில் போதைவஸ்துக்களை ஒழிப்பதற்காக பொலிஸார், இராணுவம், அதிரடிப்படை மற்றும் முக்கியமான அமைப்புகளால் முழு இலங்கையிலும் போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருள் வியாபாரம் செய்பவர்கள் என பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். யுவதிக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

யாழ். யுவதிக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

போதைப்பொருள் வியாபாரம்

10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிக்கப்பட்ட சில பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலர் பொலிஸ் தடுப்பு காவலில் உள்ளதாகவும், ஏனைய பல பேர் சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலான செய்திகள் தெரிவிக்கின்றன.

போதை வியாபாரத்தின் முக்கிய புள்ளிகளை கைது செய்ய மறுக்கும் அரசு - சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம் | Suresh Premachandran Blame Government

இவ்வாறான கைதுகள் இடம்பெறும் நிலையில் இவ்வளவு காலமும் பொலிஸாரும், படையினரும், இலங்கை அரசாங்கமும் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

அமைச்சர் கூறுகின்றார் போராட்டங்கள் நிகழ்ந்ததால் இந்த வேலைகளை செய்வதற்கு பொலிஸாரால் முடியவில்லை, இப்பொழுது தான் அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்கின்றது என்ற கருத்துப்பட அவர் கூறுவது ஒரு உண்மையான செய்தியாக எங்களுக்கு தெரியவில்லை.

கிராம மட்டங்களிலும், பாடசாலை மட்டங்களிலும் இந்த போதைப்பொருள்கள் வியாபாரம் செய்கின்ற தகவல்களை நீங்கள் திரட்டி இருக்கின்றீர்கள் என்றால் இதற்கு முன்னரே இதனை வளர விடாமல் கைதுகளை முன்னெடுத்து இருக்கலாம் என்பதுதான் எமது கருத்து.

யாழ் பல்கலைக்கழக மாணவி மரணம்: கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள உடற்கூறுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவி மரணம்: கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள உடற்கூறுகள்

கைது நடவடிக்கை

குறைந்தபட்சம் இப்போதாவது பொலிஸார் அந்த கைது நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது பாராட்டப்படக்கூடிய விடயம். ஆனால் முக்கியமான விடயம் என்னவென்றால் இங்கே இருக்கக்கூடிய முக்கியமானவர்கள், அதாவது இதற்கு முன்பு நாடாளுமன்றத்திலும் கூட பேசப்பட்ட என்னவென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றது.

போதை வியாபாரத்தின் முக்கிய புள்ளிகளை கைது செய்ய மறுக்கும் அரசு - சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம் | Suresh Premachandran Blame Government

ஆனால் இதுவரை அவ்வாறு யாரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக எங்களால் அறிய முடியவில்லை. அத்துடன் இந்தப் போதைப்பொருள்களை பெருமளவில் கடத்துகின்ற அல்லது விற்பனை செய்கின்ற முக்கியஸ்தர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே அவ்வாறு இருக்குமானால் கைது செய்யப்படுபவர்கள் கிராம மட்டங்களில் சிறியளவில் வியாபாரம் செய்பவர்களாக தான் இருக்க வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இங்கே முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த போதைப்பொருடாகளை இலங்கைக்குள் கொண்டு வந்து வியாபாரம் செய்யும் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட வேண்டும்.

கொழும்பு துறைமுக உத்தேச மையத்திற்கு வரி விலக்கு

கொழும்பு துறைமுக உத்தேச மையத்திற்கு வரி விலக்கு

ஏமாற்றுத்தனமான வேலை

வேறு நாடுகளில் இருந்து இனிமேல் போதைப்பொருட்க்கள் இலங்கைக்குள் வராத அளவிற்கு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டால் தான் இந்த போதைவஸ்தினை இல்லாது ஒழிப்பதற்கான வழிமுறையை மேற்கொள்ள முடியும்.

இல்லாது விட்டால் ஒரு பத்தாயிரம் பேரை கைது செய்தாலும் அவர்கள் இன்னும் ஒரு பத்தாயிரம் பேருக்கூடாக இந்த வியாபாரத்தை தொடங்கி நடத்துவார்கள் என்பது தான் கவலைக்குரிய விடயம்.

முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படாமல் அவர்கள் வொளியில் இருக்கும் வேளையில் அமைச்சரும் பொலிஸாரும் இணைந்து பெரிய காரியங்களை செய்து முடித்தது போன்று விழாக்களை கொண்டாடுவது என்பது சரியான செயற்பாடல்ல. இலங்கை அரசாங்கமும் பொலிஸாரும் பாரிய சாதனைகளை புரிந்திருக்கின்றார்கள் என்ற படத்தினை மக்களுக்கு காண்பிப்பதற்கு அவர்கள் விரும்பலாம்.

ஆனால் முக்கியமாக அப்படியான படங்களை காட்டுவதற்கு முன்பாக முழுக்க முழுக்க இதனை கை கொண்டு நடத்துபவர்களை கைது செய்த பின்னர் இந்த விழாக்களை கொண்டாடுவார்களாக இருந்தால் அது ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கும். இல்லா விட்டால் இது ஒரு ஏமாற்றுத்தனமான வேலையாகத்தான் இருக்கும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US