மக்களைத் திரும்பிப் பார்க்காத ஜனாதிபதி கூறுவது நகைப்புக்குரியது: சாடுகிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்

Sri Lankan political crisis Eastern Province Northern Province of Sri Lanka
By Theepan Aug 02, 2023 01:51 PM GMT
Report

விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய நீரை கொடுக்கமாட்டோம் என்று அடம் பிடிக்கும் அமைச்சரும் நீருக்காகப் போராடும் மக்களைத் திரும்பிப் பார்க்காத ஜனாதிபதியும் இந்த நாட்டை பொருளாதார பாதாளத்தில் இருந்து மீட்கப்போகிறோம் என்று சொல்வது நகைப்புக்குரியது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து, உணவுப்பொருள் உற்பத்தித் தொழிற்சாலையான விவசாயத்தை வாழவிடுங்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாவலி அதிகாரசபை செயற்பாடுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

“சப்ரகமுவ மாகாணத்திற்கான சிறுபோக விவசாயத்திற்கு உரிய நீரை காலக்கிரமத்தில் வழங்குவதாக உத்தரவாதமளித்த மகாவலி அதிகாரசபை சிறுபோகத்தின் இறுதிகட்டம் நெறுங்கியுள்ள நிலையில் நீரை வழங்க முடியாதநிலையில் உள்ளது.

1700கோடி ரூபாய் நட்டம்

மக்களைத் திரும்பிப் பார்க்காத ஜனாதிபதி கூறுவது நகைப்புக்குரியது: சாடுகிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Premacanran Media Report

சப்ரகமுவ மாகாணத்தில் சமநல வாவியின்கீழ் ஆயிரக்கணக்கான ஹெக்டெயர் நெல் வயல்கள் சிறுபோகத்தில் செய்கை செய்யப்படுகிறது. இந்த நெற்பயிருக்கான தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் பல ஆயிரக்கணக்கான ஹெக்டெயரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அழிந்து நாசமாகிவிடும் என்பதுடன் இந்தியாவிடமிருந்தோ, சீனாவிடமிருந்தோ, வியட்நாமிடமிருந்தோ இலங்கை, அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

தமது விவசாயம் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் தமக்குத் தேவையான நீரை உடன் விடுவிக்கும்படியும்கோரி அப்பிரதேச மக்கள் கடந்த பத்துநாட்களாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இன்னமும் அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன், உடவலவ அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுமாயின், ஹம்பாந்தோட்டை, காலி உட்பட ஐந்து மாவட்டங்களுக்கான மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என எரிசக்தி வலுசக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

ஆகவே நீரைத் திறந்துவிட முடியாது என மின்சார அமைச்சர் கூறுகின்ற அதேசமயம், விவசாயத்திற்கு நீர் கிடைக்காவிட்டால் 1700கோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்று விவசாய அமைச்சர் கூறுகிறார். தென்மாவட்டங்களுக்கான மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டால் நூறுகோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்று மின்சார அமைச்சர் கூறுகின்றார்.

ஏற்கனவே பொருளாதார ரீதியில் அதளபாதாளத்தில் இருக்கக்கூடிய ஒரு நாட்டில் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய நீரை கொடுக்கமாட்டோம் என்று அடம் பிடிக்கும் அமைச்சரும் நீருக்காகப் போராடும் மக்களைத் திரும்பிப் பார்க்காத ஜனாதிபதியும் இந்த நாட்டை பொருளாதார பாதாளத்தில் இருந்து மீட்கப்போகிறோம் என்று சொல்வது நகைப்புக்குரியது.

இனவாத கண்ணோட்டங்கள்

மக்களைத் திரும்பிப் பார்க்காத ஜனாதிபதி கூறுவது நகைப்புக்குரியது: சாடுகிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Premacanran Media Report

தமது மாவட்டங்களைச் சார்ந்த சிங்கள விவசாயிகளுக்கே நீரைத்திறந்துவிடாத அமைச்சர்கள், வடக்கு மாகாணத்திற்கு மகாவலியைக் கொண்டுவரப்போகிறோம் என்றுகூறி, ‘எல்’ வலயம், ‘ஜெ‘ வலயம், ‘ஐ’ வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளைக் கபளீகரம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

முறையான நீர்ச்சேகரிப்பு வசதிகளின்றி, மழைநீரை சேமித்து வைத்துள்ள குளங்களை நம்பி, மேற்கொள்ளப்பட்டுவரும் வடக்குமாகாண விவசாயச் செய்கையில் விதை நெல்லு, உரம், கிருமி நாசினிகள், டீசல், உழவுகூலி என அனைத்துமே விலையேறியிருக்கக்கூடிய சூழ்நிலையில், வடக்கு மாகாண விவசாயிகள் தமது நெல்லுக்கு ஒரு நீதியான விலைகேட்டுத் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகிறார்கள்.

ஆனால் அவர்களது கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல், தனியார் வியாபாரிகள் கொள்ளை இலாபம் அடையும் நோக்குடன் நெற்சந்தைப் படுத்தும் சபையினரும் அராவிலைக்கு நெல்லை கொள்முதல் செய்ய முயற்சிக்கின்றார்கள்.

பல ஆயிரம், இலட்சங்களைச் செலவு செய்த விவசாயிகள் இரத்தக்கண்ணீர் வடித்து நிற்கிறார்கள். ஆகவே அரசாங்கம் முதலில் இந்த நிலைமையை மாற்ற வேண்டும். வடக்கிலோ, கிழக்கிலோ, தெற்கிலோ மேற்கிலோ விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்.

இனவாத கண்ணோட்டங்களை விடுத்து, விவசாயிகளை விவசாயிகளாகவே நடத்துங்கள். இந்நாட்டிற்கு உணவளிப்பவர்களை வாழவிடுங்கள். ஏற்கனவே, ஹம்பாந்தோட்டையிலிருந்தும் ஏனைய சிங்கள பிரதேசங்களிலிருந்தும் கொண்டுவந்து குடியேற்றப்பட்டவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்காமல் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற ஒரே நோக்கில், அப்பாவி சிங்கள மக்களை அழைத்துவந்து வடக்கில் குடியேற்றுவதற்கு இலங்கையின் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஒருபுறமும் தொல்பொருள் திணைக்களம் இன்னொருபுறமும் இந்த காணிகளைக் கபளீகரம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றுவதில் தீவிரமாக இருக்கின்றனர்.

மகாவலி ‘எல்’ வலயம்

மக்களைத் திரும்பிப் பார்க்காத ஜனாதிபதி கூறுவது நகைப்புக்குரியது: சாடுகிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன் | Suresh Premacanran Media Report

அரசாங்கம், முதலாவதாக வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் தென்பகுதி சிங்கள மக்களுக்கு தாமதமின்றி தண்ணீரைத் திறந்துவிடுவது மாத்திரமல்லாமல், குடியேற்றம் என்ற பெயரில் அப்பாவி சிங்கள மக்களை அழைத்துவந்து அவர்களை நடுத்தெருவிற்குக் கொண்டுவருவதையும் நிறுத்த வேண்டும்.

மகாவலி ஆறு ஓடும் தென்பகுதி சிங்கள மக்களுக்கே தண்ணீர்ப்பற்றாக்குறையும் அவர்களுக்கான செய்கைக்கான நீரும் வழங்க முடியாத நிலை இருந்தால், மகாவலி ஆறு எட்டியும் பார்க்காத வடக்கு மாகாணத்திற்கு மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிப்பதென்பது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரலே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? மணலாறு என்ற தமிழ்ப் பிரதேசம் வெலிஓயா என்ற பெயரில் சிங்கள மயமாக்கப்பட்டு மகாவலி ‘எல்’ வலயம் என்று உருவாக்கி முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

ஆனால் அந்த வலயத்திற்கு மகாவலி ஆற்றின் நீர் இன்னமும் எட்டியும் பார்க்கவில்லை. இப்பொழுது மகாவலி ‘ஐ’ வலயம், ‘ஜெ‘ வலயம் என்ற பெயர்களில் புதிய வலயங்களை உருவாக்குவதில் மகாவலி அதிகாரசபை ஈடுபட்டு வருகின்றது.

வன்னிப் பகுதியில் சிறிய குளங்களை நம்பி, குறைந்தளவான விவசாயிகள் தமது விவசாயத்தைச் செய்து வருகின்றனர்.

நீங்கள் மகாவலி நீரைக் கொண்டுசெல்கிறோம் என்ற பிழையான பெயரில் இப்பொழுது விவசாயம் செய்யும் மக்களையும் விரட்டி, சிங்கள மக்களையும் குடியேற்றி மொத்தத்தில் தற்பொழுதுள்ள விவசாயத்தையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றீர்கள்.

தயவு செய்து இத்தகைய தொலைநோக்கற்ற சகல நடவடிக்கைகளையும் நிறுத்துங்கள். மின்சாரம் இல்லாவிட்டால் மனிதனால் உயிர்வாழ முடியும். ஆனால் வயிற்றுக்கு உணவில்லையேல் மக்கள் செத்து மடிவதைத்தவிர வேறுவழியில்லை.

உணவில்லாமல் மருந்தில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் எம்கண்முன்னே செத்து மடிந்ததைப் பார்த்த அனுபவம் எங்களுக்கு இருக்கிறது.

அந்தத் துன்பம் சிங்கள மக்களுக்கு ஏற்படவேண்டாம். அடுத்த ஜனாதிபதியும் நான்தான் என்று கூக்குரல் இடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே இந்த விடயங்களை தயவு செய்து தங்களது கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். ” என தெரிவித்துள்ளார்.


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா

9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
32ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US