சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை எந்தவித பயனுமற்றது: சுரேஷ் பிரேமச்சந்திரன்
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை எந்தவித பயனற்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (13.03.2024) நடை பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை
அவர் மேலும் கூறுகையில்,
"எதிர்க்கட்சிகள் தற்போது நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை எதிர்வரும் அமர்வின் போது கொண்டு வருவதாக இருக்கும் தீர்மானம் எந்தவித பயனும் அற்றது.
ஏற்கனவே சுகாதார அமைச்சராக கடமையாற்றி வந்த கெஹலியவிற்கும் இவ்வாறான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு தற்போது அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.எனவே இது போன்ற பிரேரணைகள் நம்பிக்கை அற்றவை பயனற்றவை" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |