பத்து வருடங்களுக்கு மேல் நீடித்த காணிப் பிரச்சினைக்கு தீர்வு
கிண்ணியா - சூரங்கள் பொதுவிளையாட்டு மைதானக்காணி உரியமுறையில் அடையாளம் காணப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
குறித்த மைதானக்காணி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு இன்று (03.03.2024) அனுமதி கிடைத்துள்ளது.
காணிப் பிரச்சினை
கிண்ணியா - சூரங்கள் பொதுவிளையாட்டு மைதானத்திற்கான காணிப் பிரச்சினை சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக நீண்ட இழுபறியில் இருந்து வந்தது.
அண்மையில் அம் மைதானத்திற்கு விஜயம் செய்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டதோடு காணி பிரச்சினை நிறைவுக்கு வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் ணையுங்கள் JOIN NOW |


