தேசிய ரீதியில் சாதித்த ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள்
ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற கர்நாடக சங்கீதப் போட்டியில் கிராமிய பாடல் என்ற பிரிவின் கீழ் பங்குபற்றி மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
குறித்த பாடசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசீல்களும் வழங்கி வைத்ததோடு ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சிப் பாதை
மேலும், குறித்த நிகழ்வில் உரையாற்றிய வடிவேல் சுரேஷ், “மலையகத்தின் மறுமலர்ச்சி கல்வியிலேயே தங்கியுள்ளது. மாணவர்களாகிய நீங்கள் பெற்றோர் படும் துயரை நன்குணர்ந்து கல்வியிலும் ஏனைய செயற்பாடுகளிலும் முன்னேற்றம் கண்டு மலையகத்திற்கும் பெற்றோருக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இன்னும் பல சாதனையாளர்கள் இந்த பாடசாலையில் இருந்து உருப்பெற வேண்டும். அனைத்து துறைகளிலும் தடம் பதிக்க வேண்டும்.ஏன் அரசியலிலும் கூட. நீங்கள் அனைவரும் சாதனையாளர்களாக மாறும்போது மலையகத்திலும் புதிய மலர்ச்சி உருவாகும்.
நாளைய மலையகம் உங்கள் கைகளிலேயே அழகாக போகிறது .. மலையக பாடசாலைகள் வளர்ச்சிப் பாதையினை நோக்கி பயணிக்க என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்வேன்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



