உயர் நீதிமன்றத்தில் நிலவும் வெற்றிடங்கள்.. சபாநாயகருக்கு எதிர்க்கட்சி அவசர கடிதம்
உயர் நீதிமன்றத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி கோரி சபாநாயகருக்கு கடிதம் அனுப்ப எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற விவாதம்
அது தொடர்பான கடிதமொன்றில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (26) கையெழுத்திட்டுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் எட்டுக்கும் மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது.
அது சட்டத்தின் ஆட்சியில் ஏற்படும் தாக்கம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நீதி பெறுவதற்கான அணுகல் ஆகியவற்றில் ஏற்படும் விளைவுகள் குறித்து நாடாளுமன்றத்தின் பொறுப்பு மற்றும் கடமையுணர்வை வலியுறுத்தும் வகையில் இந்தக் கடிதத்தில் கையெழுத்திடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஈரானுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் அமெரிக்கா - ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் தலையிடுமா இந்தியா..!