மீண்டும் ஈரானுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் அமெரிக்கா - ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் தலையிடுமா இந்தியா..!
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட பின்னரும் வரும் அச்சுறுத்தல்களை தவிர்ப்பதற்கு உலக அளவில் ஒரு பாதுகாப்பு கவுன்சில் இருக்க வேண்டும் என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்கா - ஈரான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்றுவது போன்ற அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளுக்கு “உலக அளவில் ஒரு பாதுகாப்பு கவுன்சில்” ஒன்று இருக்க வேண்டும் என்று ஈரான் விரும்புவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடுநிலை வகிக்குமா இந்தியா
இஸ்ரேல், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் ஒரு வலுவான உறவுகளை இந்தியா பேணி வருகின்றமையினால் அனைத்து தரப்பு நாட்டினரையும் சுமூகமான பேச்சுவார்த்தைக்கு கொண்டு வரும் ஒரு நட்பு நாடாகவே இந்தியா பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை பிரச்சனையில் இந்தியா முன்னின்று செயல்படுவதன் மூலம், பிராந்திய வர்த்தகத்தை நிலைப்படுத்துதல் மற்றும் நாடுகடந்த பயங்கரவாதத்தை எதிர்கொள்வது ஆகியவற்றின் மீது சர்வதேச கவனத்தை திரும்ப பெறமுடியும்.
இந்த அமைதி பேச்சுவார்த்தையை ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே வெற்றிகரமாக நடத்துவது, அதன் மீது உலகளாவிய நிர்வாகத்தில் இந்தியாவின் நிலையை உயர்மட்டத்தில் நிலை நிறுத்த முடியும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.