35 ஆண்டுகளாக சிறையில் வாடும் இலங்கையர் தொடர்பில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
குற்றம் ஒன்றுக்கான விசாரணையில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டமையின் அடிப்படையில் ஏற்கனவே 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இலங்கையர் ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018 கொள்கையின் அடிப்படையில் மனுதாரரின் முன்கூட்டிய விடுதலையை மறுத்ததற்கு எதிரான மனுவில் நீதியரசர்கள் அபய் எஸ். ஓகா மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆயுள் தண்டனை
இந்தநிலையில் மனுதாரரின் மேல்முறையீட்டு மனு மீது மூன்று வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம் ஒன்றுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்த இலங்கையர், ஏற்கனவே 35 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.
இதனையடுத்து 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதியன்று முன்கூட்டிய விடுதலையை கோரியிருந்தார். இருப்பினும், அவரது மனு 2021இல் இரண்டு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது.
இலங்கையரான மனுதாரரின் கோரிக்கை
செய்த குற்றத்தின் தீவிரம் மற்றும் இரண்டாவதாக, இணை குற்றவாளிகளின் விசாரணைகள் முடிவடையாமை நியாயமான விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்பனவே அந்த இரண்டு காரணங்களாகும்.
இதேவேளை, முன்கூட்டிய விடுதலைக்குப் பிறகு, தாம் சொந்த நாட்டிற்குத்
திரும்புவதை உறுதி செய்வதற்காக, உள்துறை அமைச்சகத்தின் மூலம் இந்திய
அரசாங்கத்திடம் குறித்த இலங்கையரான மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

அதிரவைக்கும் பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம் News Lankasri

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
