கிண்ணியாவில் சஜீத்துக்கு ஆதரவு கோரி வீதியோர பிரசாரம்
திருகோணமலை - கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவுக்கு வாக்களிக்க கோரி பிரசார நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரசார நடவடிக்கையானது இன்று(04.09.2024) ஐக்கிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரதேச முக்கியஸ்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரசார நடவடிக்கை
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் கட்சி ஆதரவாளர்கள் கிண்ணியா பிரதேச சபை பகுதியில் உள்ள பொது சந்தையில் வீதியோர பிரசார பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, பிரசார நடவடிக்கையில் கலந்து கொண்ட அனைவராலும் துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த பிரசார நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் எம். எம். மஹ்தி,நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், பிரத்தியேக செயலாளர் சதாத் கரீம் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.