ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே ஆதரவு: இராஜாங்க அமைச்சர் டயானா தெரிவிப்பு
நாட்டின் தற்போதைய முறைமைக்கமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம் எனவும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கே தனது ஆதரவு என்றும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(Diana Gamage) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது , "இந்த நாட்டை மீட்கக் கூடிய ஒருவருக்கே ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கப்படும்.
மக்கள் ஆணை
அதனை ரணில் விக்ரமசிங்க( Ranil Wickremesinghe)செய்து வருகின்றார். எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மக்கள் ஆணையுடன் அவர் பதவிக்கு வரவேண்டும். நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கியமை மகிழ்ச்சியளிக்கின்றது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) பக்கமே நிற்பேன். ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்தால் கூட ஏற்கப்போவதில்லை என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |