ரணிலுக்கு ஆதரவு! மொட்டு கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு-செய்திகளின் தொகுப்பு
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக பரிந்துரைக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு இடையில் இதுவரையில் உத்தியோகபூர்வமற்ற புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உட்கட்சி தகவல்களின்படி, இந்த விடயம் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
எனினும் இன்றுவரை அது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஏற்கனவே நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட போது, தற்போதைய ஜனாதிபதிக்கே, பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவை, 2025 ஜனாதிபதி தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஆதரிக்கும் யோசனையை, கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் உறுப்பினர்கள் சிலர் கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
