யாழ். தொழிநுட்ப கல்லூரிக்கு பல இலட்சங்கள் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு (Video)
கனடாவில் இருக்கக்கூடிய நந்தகுமார் என்ற நந்தன் 22 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி மூலமாக குறித்த பொருட்கள் இன்றைய தினம் (06.11.2023) கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளன.
நில அளவு குறித்த கற்கைகளில் ஈடுபடும் பிள்ளைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் இன்றி மாணவர்கள் படும் அவதியை கடந்த 3 மாதங்களுக்கு முன், லங்காசிறி ஐபிசி தமிழ் ஊடக வலையமைப்பின் தலைவரும், புலம்பெயர் தமிழ் தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் காணொளியொன்றின் மூலம் வெளிக்கொணர்ந்திருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த கல்லூரியின் பழைய மாணவரான நந்தகுமார் இலங்கைக்கு வந்திருந்த நிலையில், கந்தையா பாஸ்கரன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக முதற்கட்டமாக குறித்த பொருட்களை கல்லூரிக்கு மிஸ்டர் கொங்கிரீட் என்ற அவருடைய நிறுவனத்தின் ஊடாக பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த உதவியை வழங்கிய கனடாவில் இருக்கக்கூடிய நந்தகுமார் என்ற நந்தனுக்கு லங்காசிறி ஐபிசி தமிழ் ஊடக வலையமைப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.




















அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
