கொள்கலனில் எரிபொருள் விநியோகம்: இருவர் கைது
வவுனியா - புளியங்குளத்தில் கொள்கலனில் எரிபொருள் விநியோகம் செய்தமை குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - புளியங்குளம் பகுதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று எரிபொருள் விநியோகம் இடம்பெற்றபோதே அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை சீராக பின்பற்றப்படாது எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளதுடன், சில வாகனங்களுக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எரிபொருள் அட்டை முறை
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கட்டுப்படுத்தும் முகமாக அரசாங்கத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் அட்டை முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எரிசக்தி அமைச்சால் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு கடந்த முதலாம் திகதி முதல் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலதிக விசாரணைகள்
இந்த நிலையிலேயே பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொள்கலன் ஒன்றில் எரிபொருள் எடுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டதுடன், குறித்த நபருக்கு எரிபொருள் விநியோகம் செய்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரும் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில்
முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
