வானில் இன்று இரவு தென்படவுள்ள சூப்பர் மூன்
2025 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் (Supermoon) இன்று அக்டோபர் மாதம் 6 திகதி இரவு வானத்தில் தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் தொழில்நுட்ப நிறுவனம் (ACCIMT) தெரிவித்துள்ளது.
இந்த முழு நிலவு வழக்கத்தை விட கிட்டத்தட்ட 14% பெரியதாகவும், 30% அதிகப் பிரகாசத்துடனும் வானில் ஒரு இராட்சசப் பந்து போலத் காட்சியளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இரவு 11:48 மணிக்கு உச்சபட்ச பிரகாசத்தை நிலவு அடையும் என்றும், அதன்படி இன்று முழுமையான நிலவு வழக்கத்தைவிட பெரியதாகவும், பிரகாசமானதாகவும் காணப்படும்.
வானியல் அதிசயம்
சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் நகரும்போது வருடத்திற்கு பல முறை சூப்பர் மூன்கள் நிகழ்கின்றன.
அனைத்து பௌர்ணமிகளிலும் சூப்பர் மூன் நிகழாது எனவும், இந்த முறை நிகழும் சூப்பர் மூன் வானத்தை முழுவதும் ஒளிரச்செய்யும் வானியல் அதிசயமாக இருக்கும் எனவும், இதனை தவறாமல் அனைவரும் காண வானியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அடுத்த சூப்பர் மூன் 2025 நவம்பர் 7 மற்றும் டிசம்பர் 4-ல் நடைபெறும் என்று நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
