பெப்சிகோ தயாரிப்புகளை புறக்கணிக்கும் ஐரோப்பிய நாடுகள்
உலகளாவிய பல்பொருள் அங்காடி குழுமமான கேரிஃபோர் அதன் அங்காடிகளில் பெப்சிகோ தயாரிப்புகளை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள குறித்த நிறுவனத்தின் அங்காடிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பே இதற்கு காரணம் பெப்சிகோ தயாரிப்புகளின் விலை அதிகரிப்பு என கூறப்படுகிறது.
பெப்சிகோ தயாரிப்புகள்
பிரான்ஸ் அங்காடிவிநியோக நிறுவனமான Carrefour கடந்த வியாழக்கிழமை(04) இந்த முடிவுக்கு வந்துள்ளதுடன், ஏற்றுக்கொள்ள முடியாத விலை உயர்வு காரணமாக இனி PepsiCo தயாரிப்புகளை விற்பனை செய்வதாக இல்லை என்றும் தங்கள் அங்காடிகளில் குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸ் மட்டுமின்றி, இதே முடிவை தங்களது பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள அங்காடிகளிலும் பின்பற்ற முடிவு செய்துள்ளது.
எனினும், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 12,225 அங்காடிகளை நடத்திவரும் Carrefour நிறுவனம், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் பெப்சிகோ PepsiCo தயாரிப்புகளுக்கு தடைவிதிப்பதற்கான தினம் தொடர்பில் விளக்கமளிக்கவில்லை.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் Carrefour நிறுவனத்துடன் தொடர்ந்து விவாதித்து வருவதாகவும், சாதகமான முடிவை எட்டுவோம் என்று நம்புவதாகவும் பெப்சிகோ PepsiCo அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், Cheetos, Mountain Dew மற்றும் Rice-A-Roni தயாரிப்புகளுக்கு கடந்த 7 காலாண்டுகளாக PepsiCo விலையை உயர்த்தி வந்துள்ளதாகவும், மிக சமீபத்தில் ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் 11 சதவிகிதம் விலை உயர்வை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மக்கள் மலிவாக விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை நாடத்தொடங்கியுள்ளனர். குளிர்பானங்கள் மற்றும் உணவு வகைகளுக்கான விலை உயர்வு 17.5 சதவிகிதமாக இருந்த நிலையில் இருந்து பெருமளவு குறைந்திருந்தாலும், யூரோ நாணய பயன்பாடு கொண்ட 20 நாடுகளில் தற்போது 6.9 சதவிகிதமாகவே விலைவாசி உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய்க்கான விலைகள் உயர்ந்து வருவதை பெப்சிகோ சுட்டிக்காட்டியுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு
இதற்கு முதன்மை காரணமாக ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் 2022ஐ ஒப்பிடுகையில் தானியங்களின் விலை தற்போது பெருமளவு சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 20 மணி நேரம் முன்

இஸ்ரேலை விட்டு வெளியேறும் யூதர்கள்.. வெளியே கூறமுடியாத இஸ்ரேலின் மிகப் பெரிய இராணுவ இழப்பு News Lankasri
