சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் திகதி இதுதான்! நாசா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ்(sunita-williams) மற்றும் பேரி வில்மோர்(Barry Wilmor) ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்பும் திகதியை நாசா அறிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) மற்றொரு வீரரான புட்ச் வில்மோர்(Butch-wilmore) கடந்த ஜூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
தொழில்நுட்ப கோளாறு
இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில் ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில் ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ்
அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 16ஆம் திகதி பூமிக்கு திரும்பவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
சுனிதாவும், வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 மிஷன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள். நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்-இன் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 விண்கலம் வழியாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
அந்த விண்கலத்தில் இரண்டு இருக்கைகள் சுனிதா மற்றும் வில்மோருக்காக காலியாக விடப்படும். அந்த விண்கலத்தில் அவர்கள் நால்வரும் மீண்டும் பூமிக்கு திரும்புவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி அவர்கள் நான்கு பேரும் மார்ச் 16 அன்று ஒன்றாகத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது செய்யும் வேலை? News Lankasri

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan

குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் Cineulagam
