மக்களின் காணி சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப் பெற வேண்டும்! தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்
வலி. வடக்கில் மக்களுடைய காணிகளை உள்ளடக்கி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப் பெற வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று(18.07.2026) தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் இல்லத்தில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வலி. வடக்கு காணிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலி. வடக்கில் இராணுவ வைத்தியசாலை மீளக் கட்டப்பட்டு வருகிறது. அது தொடர்பில் அவதானத்தைச் செலுத்தினோம்.
ஏற்கனவே வலி. வடக்கு காணிகள் தொடர்பான வழக்கில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ள காணியும் உள்ளடங்குகின்றது.

வைத்தியசாலையை கட்டுவதற்கு உள்ளூராட்சி மன்றத்தின் கட்டட அனுமதி பெறப்பட வேண்டும். அவ்வாறு பெறப்படாத கட்டிடங்களை அகற்றுவதற்கு பிரதேச சபைக்கு அதிகாரம் இருக்கிறது.
இவ்வாறான ஒரு நிலையில் அரசாங்கத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வலி. வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை திரும்ப பெற வேண்டுமென நாம் கோரிக்கை முன்வைக்கின்றோம்.
மாகாண சபைத் தேர்தல்
மேலும், கொழும்பில் ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினோம்.
அந்தக் கலந்துரையாடலில் மாகாண சபை தேர்தலை வலியுறுத்துவது, புதிய அரசியல் அமைப்பு மற்றும் காணி உரிமம் தொடர்பான விடயங்களுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை சனத் தொகையில் ஏறத்தாழ 25 சதவீதமாக காணப்படுகின்றவர்கள் நாம். ஒன்றாக இணைந்து ஒரு செயற்பாட்டை வலியுறுத்தும் போது அது பலமானதாக இருக்கும்.
அத்துடன் பல போராட்டங்களுக்கு மத்தியில் பெறப்பட்ட மாகாண பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை நாங்களே மத்திக்கு கொடுப்பதற்கு முனைய கூடாது. அதற்காக எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan