உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் அர்ஜென்டினாவுக்கு மெஸ்ஸியின் உருக்கமான இறுதி செய்தி
2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ளும் முன், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான லியோனல் மெஸ்ஸி தனது சக வீரர்களுக்காக உருக்கமான திறந்த கடிதம் ஒன்றை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, அரையிறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
வாருங்கள் அர்ஜென்டினா
அந்தப் போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல் வாய்ப்புகளை உருவாக்கி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
இறுதிப்போட்டிக்கு முன், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவுடன் எடுத்த குழுப் புகைப்படத்தை பகிர்ந்த மெஸ்ஸி, தனது பதிவில், "இந்த ஆண்டுகள் முழுவதிலும் அழகானது பட்டங்களை வென்றதல்ல.
இந்த அணியுடன் ஒவ்வொரு நாளையும் பகிர்ந்து கொண்டதும், ஒன்றாகப் போராடியதும், கடினமான தருணங்களில் மீண்டு வந்ததும், ஒவ்வொரு அடியையும் ரசித்ததும்தான்.
என் சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இந்த அணியை ஒரு குடும்பமாக வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நாளை என்ன நடந்தாலும், இந்த அணி யாராலும் அழிக்க முடியாத வரலாற்றை ஏற்கனவே எழுதி விட்டது. வாருங்கள் அர்ஜென்டினா!" என்று குறிப்பிட்டுள்ளார்.
மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை
இந்த பதிவு, அர்ஜென்டினா அணியின் ஒற்றுமையையும் குடும்ப பாசத்தையும் வெளிப்படுத்துவதோடு, இறுதிப்போட்டியின் முடிவு எப்படியிருந்தாலும் அவர்கள் ஏற்கனவே வரலாறு படைத்துவிட்டனர் என்ற நம்பிக்கையையும் சக வீரர்களுக்கு அளிக்கிறது.

அதேவேளை, இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பைப் போட்டியாகவும், சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் இறுதிப் போட்டியாகவும் இருக்கலாம் என்ற ஊகங்களும் வலுத்துள்ளன.
எனினும், தனது எதிர்காலம் குறித்து பேசாமல், தற்போதைய போட்டியிலேயே முழு கவனம் செலுத்தி வருவதாக மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
மேலும், உலகக் கோப்பையை வெல்வதோடு மட்டுமல்லாமல், தொடரின் கோல்டன் பூட் விருதுக்கான போட்டியிலும் மெஸ்ஸி முன்னணி வீரர்களில் ஒருவராக உள்ளார்.
தற்போதைக்கு கிலியன் எம்பாப்பே அந்தப் பட்டியலில் முன்னிலையில் இருந்தாலும், அணியின் வெற்றியே தனது முதன்மை இலக்கு என மெஸ்ஸி வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri