பணம் வசூலித்தும் - வாக்கு அறுவடை செய்தும் மாவீரரின் தியாகத்தை அவமதிக்க வேண்டாம் என கோரிக்கை

Jaffna M A Sumanthiran Northern Province of Sri Lanka
By Rakesh Nov 22, 2026 06:16 AM GMT
Report

மாவீரர்களின் உயரிய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் பணம் வசூலிப்பதற்கும், தேர்தலில் வாக்கு அறுவடை செய்வதற்கும் சிலர் சுயநல ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவது அந்த வீரர்களை அவமதிக்கும் மிகவும் மோசமான செயலாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு வளாகத்தை நேற்று (21.11.2026) காலை சுடரேற்றித் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாவீரர் வாரம் உணர்வுபூர்வமாக ஆரம்பிப்பு

அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த வருடமும் வழமை போல் மாவீரர் வாரத்தை நாங்கள் இன்றிலிருந்து உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கின்றோம். வடக்கு, கிழக்கு பூராகவும் எங்களுக்காகப் போராடி மடிந்த போராளிகளை நினைவுகூருகின்ற வாரம் இது. நாங்கள் தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்ற ஒரே செய்தியைத்தான் இன்றைக்கும் சொல்ல வேண்டியதாக இருக்கின்றது.

தங்களுக்காக அல்லாமல், எங்களுக்காக, எங்கள் இனத்துக்காகத் தங்களுடைய உயிரைக் கொடுத்தவர்களை நாங்கள் என்றும் எங்களுடைய நினைவிலே வைத்திருப்போம். அவர்களை மறக்க மாட்டோம். அதற்கென்று ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட வாரத்திலேதான், அந்த நாள்களிலேதான் நாங்கள் அவர்களை இந்த விதமாக நினைவுகூருவோம்.

ஆனால், இந்த வாரத்திலே மட்டுமல்ல, எங்களுடைய உயிர் மூச்சு இருக்கின்ற வரைக்கும், எங்களை வாழ வைப்பதற்காகத் தங்களை மாய்த்தவர்கள், தாங்களாக முன்வந்து தங்களது உயிரைக் கொடுத்தவர்களை நாங்கள் தொடர்ச்சியாக நினைவிலே இருத்தி, அவர்களைப் போற்றி, எங்களுடைய இனத்தின் சரித்திரத்திலே மிகவும் தூயதான ஒரு காலமாக, ஒரு படலமாக அவர்களை நாங்கள் நினைவுகூருகின்றோம்.

அவர்களுடைய இந்தத் தியாகமும் அர்ப்பணிப்பும் ஈடு இணையற்றது. இந்தத் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் நாங்கள் இந்த விதமாக நினைவுகூருவது போல், பலர் இதை வேறு விதமான ஆதாயமாகத் தங்களுக்கு உபயோகிக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பணம் வசூல் செய்வதற்கும், ஏன் தேர்தலிலே வாக்கு அறுவடை செய்வதற்கும்கூட இதனைப் பலர் பயன்படுத்துகின்றார்கள். அது மிகவும் மோசமான, இந்த வீரர்களை அவமதிக்கின்ற செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

பணம் வசூலித்தும் - வாக்கு அறுவடை செய்தும் மாவீரரின் தியாகத்தை அவமதிக்க வேண்டாம் என கோரிக்கை | Sumanthiran Statement About Maveerar Day

உயரிய உச்சமட்ட அர்ப்பணிப்பு

ஆனால், சிலர் அப்படிச் செய்கின்றார்கள் என்பதற்காக நாங்கள் சரியான முறையிலே அவர்களை நினைவுகூரத் தவறக்கூடாது. இந்த உயரிய உச்சமட்ட அர்ப்பணிப்பை நாங்கள் எப்பொழுதுமே நினைவுகூருவோம், மறக்க மாட்டோம், அதைப் போற்றுவோம்.

விசேடமாக இன்றைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியாக, ஒரு தமிழ் சமூகமாக, அரசியலிலே எங்களுடைய மக்களுடைய விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்காக முன்னின்று செயற்படுகின்ற பிரதான அரசியல் இயக்கமாகவும்கூட, இறந்தவர்களுடைய இந்த அர்ப்பணிப்பும் தியாகமும் உயிர்த்தியாகமும் எங்களுடைய இந்த விடுதலைப் பயணத்திலே மிக முக்கியமான ஒரு பங்கை வகிக்கின்றது என்பதை நாங்கள் பதிவு செய்கின்றோம்.

இதே மாதத்திலேதான் இன்றைய ஆட்சியாளர்களும் தங்களுடைய கட்சியிலே இருந்து ஆயுதமெடுத்துப் போராடி மடிந்தவர்களை நினைவுகூருகின்றார்கள். சென்ற வாரம் ஜனாதிபதியும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளரும் வழமை போல் அந்த நினைவுகூரலிலே பங்குபற்றியிருந்தார்கள்.

ஆகவே, அவர்களும் ஒரு அரசியல் இலக்குக்காக ஆயுதமெடுத்துப் போராடி மடிந்தவர்களை வருடா வருடம் நினைவுகூருவதைப் போலவேதான், எங்களுடைய மக்களுடைய அரசியல் முடிவுக்காகத் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்த இந்த வீரர்களை நாங்களும் நினைவுகூருகின்றோம்.

இந்த வாரம் முழுவதும் இந்த நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு பூராகவும் நடைபெறும். இதிலே அனைத்துத் தமிழ் மக்களும் உணர்வுபூர்வமாகக் கலந்துகொள்ளுமாறு மிகவும் அன்பாகவும் விநயமாகவும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

யாழ். பல்கலை மாணவ குழுக்களுக்கிடையே வெடித்த மோதல்.. எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

யாழ். பல்கலை மாணவ குழுக்களுக்கிடையே வெடித்த மோதல்.. எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US