முன்னாள் நகரசபை தவிசாளருக்கு தமிழரசு கட்சி கொடி போர்த்தி அஞ்சலி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் அமரர் வேலுப்பிள்ளை நவரத்தினத்தின் உடலுக்கு தமிழரசுக் கட்சியின் கொடியை போர்த்தி நேற்று (12.07.2024) அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வேலுப்பிள்ளை நவரத்தினம், கடந்த மாதம் 28ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் விபத்துக்கு உள்ளாகிய நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதனையடுத்து, கடந்த 09/07/2024 அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறுதிக் கிரிகைகள்
அவரின் இறுதிக் கிரிகைகள் அன்னாரது பருத்தித்துறை தும்பளை கிழக்கு இல்லத்தில் இடம்பெற்ற போதே அமரரின் உடலுக்கு தமிழரசுக் கட்சி கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அன்னாரது இறுதி நிகழ்வான நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன்,
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், முன்னாள் பருத்தித்துறை நகரசபை
தவிசாளர் இருதயராசா, உட்பட முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள்,
அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






500 கோடி பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் வீசிய கடைக்காரர்- அதிர்ஷ்டத்தை இழக்கவிருக்கும் பிரித்தானிய பெண் News Lankasri
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam