உள்ளுராட்சித் தேர்தலில் பெண் வேட்பாளருக்காக காடுமேடெல்லாம் தேடவில்லை: சுமந்திரன் கருத்து
உள்ளூராட்சித் தேர்தலில் களமிறக்கப்படும் பெண் வேட்பாளர்களுக்காக காடு மேடெல்லாம் தேட வேண்டிய அவசியம் தமிழரசுக் கட்சிக்கு ஏற்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களை காடு மேடெல்லாம் தேடியதான சுமந்திரனின் கருத்துக் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
“இந்த முறை காடு மேடெல்லாம் தேட வேண்டிய தேவை இருக்கவில்லை.
முன்னுரிமை
உள்ளூராட்சித் தேர்தலுக்காக ஏற்கனவே 2023ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில் கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இம்முறை பெண் வேட்பாளர்களுக்காக காடு மேடெல்லாம் அலைய வேண்டிய தேவை இருக்கவில்லை.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கிறோம். மிகுதி
12 சபைகளுக்கான வேட்புமனுக்களை நாளை காலை சமர்ப்பிப்போம். நிறைந்த போட்டியின் மத்தியிலே வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது.
அதனால் சற்று நேரம் தாமதித்து தான் இறுதி செய்து கொண்டிருக்கிறோம். கட்சியினுடைய தீர்மானத்தின் படி எந்த ஒரு சபைக்கும் முதல்வரோ தவிசாளரோ அறிவிக்கப்படப் போவதில்லை.
தேர்தலுக்கு பிறகு தான் அது சம்பந்தமாக கட்சி முடிவு எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam
