சுமந்திரன் எம்.பிக்கு கொரோனா இல்லை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்குக் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்துத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 5ஆம் திகதி ஹக்கீமுக்கு அருகிலிருந்து கஞ்சி பருகியமையால் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் எம்.பிக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் முடிவு இன்றிரவு வெளியாகியபோதே அவருக்குத் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் உறுதிப்படுத்தினர்.





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
