தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) கலந்துகொண்டுள்ளார்.
குறித்த மாநாடானது, நேற்றையதினம் (04.04.2024) மாலை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயாக்கவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
அதேவேளை, இந்த மாநாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் வங்கி மற்றும் நிதி அமைப்பின் உறுப்பினர் சமீர அல்விஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள்
மேலும், பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri
