அமைச்சர் டக்ளஸ் முயற்சியில் இணுவில் தொடருந்து கடவைக்கு புதிய சமிக்ஞை விளக்குகள்
இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் தொடருந்து கடவைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் (douglas devananda) முயற்சியில் சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு ஆகியன பொருத்தப்பட்டு, இன்று அதன் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி, வேனில் பயணித்துக் கொண்டிருந்த இளம் குடும்பத்தினர், இணுவில் பகுதியில் அமைந்திருந்த குறித்த பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட போது தொடருந்தில் மோதுண்டனர்.
இதனால் இளம் குடும்பத் தலைவரும் சில மாதங்களேயான பச்சிளம் குழந்தையும் ஸ்தலத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
குழந்தையின் தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்தினையடுத்து, பிரதேச மக்களினால் புகையிரத கடவையில் நடாத்தப்பட்ட எதிர்ப்பு போரட்டத்தை அடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தற்காலிக தீர்வொன்றினை உடனடியாக நடைமுறைப்படுத்தியதுடன் நிரந்தர தீர்வாக ஓசை எழுப்பும் வகையிலான ஒளி சமிஞ்சை விளங்கு மற்றும் பாதுகாப்பு படலை ஆகிவற்றை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அரசாங்க தரப்புக்களின் ஊடாக முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில், சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் தொடருந்து திணைக்களத்தினால்
பொருத்தப்பட்ட சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பினை செயற்பாடுகளை இன்று அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.











வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
