ஆசிரியர் சங்கம் சார்பில் யாழ். மேல் நீதிமன்றில் சுமந்திரனால் மனுத் தாக்கல்
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்ற தீர்மானித்திற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரனால் பாதிக்கப்பட்ட ஆசியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கல்வித் திணைக்களத்தின் தீர்மானத்தின் படி, 290 ஆசிரியர்கள் தரவுகள் எவையுமின்றி, முறையற்ற விதமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், நேற்று (21.10.2025) மாலை 2 மணியளவில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரனால் சமர்ப்பணம் முன் வைக்கப்பட்ட நிலையில், வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மனு மீதான விசாரணை
இதன்படி, குறித்த மனு, 2025.11.10 அன்று விசாரணைக்காக திகதியடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri