வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் சுமந்திரன் கலந்துரையாடல்
வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும், தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் (13.08.2025) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை போன்ற விடயங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசு கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த ஹர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர்கள் ஆதரவினை வழங்குமாறு கோரியே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஹர்த்தால் அனுஸ்டிக்க அழைப்பு
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தால் ஒன்றை அனுஸ்டிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) அதனை அனுஸ்டிக்குமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து வந்த கோரிக்கை காரணமாக அதனை 18ஆம் திகதி என மாற்றியுள்ளோம்.
அந்தவகையில் முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு மரணமான சம்பவம் இடம்பெற்றிருந்தது. பிரதானமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் அழைக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் எமது பகுதிகளில் மக்கள் மத்தியில் தேவைக்கு அதிகமான இராணுவக்குவிப்பு மற்றும் இராணுவ முகாம்கள் நீண்டகாலமாக நிலைகொண்டிருப்பதால் இப்படியான தொடர் விளைவுகள் ஏராளமாக நடக்கின்றது. எனவே இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்.
யாழ். செம்மணி மனிதப்புதைகுழி
மக்களின் சாதாரண வாழ்க்கையிலே அவர்களின் ஈடுபாடு இருக்க கூடாது என நீண்ட நாட்களாக நாங்கள் சொல்லி வருகின்றோம். அதன் விளைவே இந்த மரணமும் கூட. எனவே இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். செம்மணி மனிதப்புதைகுழியானது மிகவும் மோசமான முறையிலே செய்யப்பட்டிருக்கின்றது. குழந்தைகளது சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான ஆதாரங்கள் வெளிவரும் சந்தர்ப்பங்களில் அவற்றை எல்லாம் முன்னிலைப்படுத்தி இந்த ஹர்த்தாலை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். வடக்கு, கிழக்கை முற்றிலுமாக முடங்கச்செய்யும் போராட்டமாக இதனை நாம் நடத்த வேண்டும்.
வடக்கின் ஏனைய மாவட்டங்களின் வர்த்தக பிரதிநிதிகளுடனும் நாங்கள் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளோம். அவர்கள் ஆதரவினை வழங்குவதாக சொல்லியிருக்கின்றனர். கிழக்கிலும் முழுமையான ஆதரவு வழங்குவதாக சொல்லியிருக்கின்றார்கள். இதுவரை பாரியளவிலான ஆதரவு இந்த ஹர்தாலுக்கு கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 7 மணி நேரம் முன்

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
