வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு சி.வி.கே அழைப்பு
எதிர்வரும் 18 ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் நடைபெற உள்ள ஹர்த்தாலுக்கு அனைவரும் கலந்து கொள்ளுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (13) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் அமைந்திருப்பதன் காரணத்தினாலேயே இவ்வாறான பல தாக்குதல்கள் நடைபெறுகின்ற காரணத்தினால் இதை ஒரு சுட்டியாக கருதி வடக்கு கிழக்கிலே மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலே அமைந்திருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டின் நோக்கமாக நாங்கள் கர்த்தாலுக்கு அழைப்பு விட்டிருந்தோம்.
அழைப்பு
ஹர்த்தால் சிலருக்கு அசௌரியமாக இருக்கலாம். குறிப்பாக நாளாந்த உழைப்பாளர்கள், பழுதடைகின்ற பொருட்களை விற்போருக்கு, போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு பாதிப்பாக இருக்கலாம்.
ஆனால் நீண்ட காலத்திற்கு பிறகு தமிழரசுக்கட்சி இந்த கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளில் ஒற்றுமையாக நமது கோரிக்கையினை காட்ட வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
நாங்கள் ஒட்டுமொத்தமாக எங்களுடைய எதிர்ப்பினை காட்டுவது மட்டுமல்ல இராணுவம் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த ஹர்த்தாலின் அடிப்படை நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 6 மணி நேரம் முன்

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
