சமஷ்டி கோரிக்கைக்காக முன்னிற்கும் சுமந்திரன்

Ilankai Tamil Arasu Kachchi M. A. Sumanthiran Government Of Sri Lanka
By Parthiban Dec 19, 2024 09:32 PM GMT
Report

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பில் சமஷ்டி ஆட்சியை நடைமுறைப்படுத்துமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M.A. Sumanthiran) மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். 

1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் ஸ்தாபகத் தலைவர்களின் ஒருவரான தந்தை செல்வாவின் நினைவிடத்தில் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எம்.ஏ சுமந்திரன், தமிழ் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையானது சமஷ்டியே என வலியுறுத்தினார்.

“தமிழ் மக்களுடைய ஜனநாயக தீர்ப்பு 1956ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ச்சியாக சமஷ்டி முறையிலான ஆட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதே. அது மக்களுடைய ஜனநாயக தீர்ப்பாக இருக்கின்றது.

அநுரவின் ஆட்சிக்கு பெரும் சவாலாகும் திருகோணமலை துறைமுகம்!

அநுரவின் ஆட்சிக்கு பெரும் சவாலாகும் திருகோணமலை துறைமுகம்!

புதிய அரசியலமைப்பு 

ஒரு குறித்த மக்களின் ஜனநாயக தீர்பாக அமைந்துள்ளது. நாட்டிற்கு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது நாட்டின் ஆட்சி முறையை சமஷ்டி முறைக்கு மாற்றப்பட வேண்டும் என்ற வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். 

சமஷ்டி கோரிக்கைக்காக முன்னிற்கும் சுமந்திரன் | Sumanthiran Continues To Push For Federalism

ஆகவே 75 வருடங்களாக வியாபித்துள்ள இந்த கட்சியின் ஆரம்ப நாளை நினைவுகூருகின்ற இந்த நாளில் புதிதாக வந்துள்ள அரசாங்கத்திற்கும் நாங்கள் ஒரு செய்தியை சொல்லுகின்றோம்.

சர்வதேச சட்டத்திலே மக்களாக கணிக்கப்படுகின்ற நாம் ஒரு தேசம். எங்களது ஜனநாயக தீர்ப்பிற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதாக வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்.


அந்த வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டுமென்பது எமது கோரிக்கை. அதனை செய்கின்றபோது நீண்டகாலமாக எவ்வித சலனமும் இன்றி தொடர்ச்சியாக சமஷ்டி ஆட்சி முறைமைக்கு எமது ஆட்சி முறை மாற்றப்பட வேண்டும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் சொல்லும் இந்த ஜனநாயக தீர்ப்பை மதித்து அந்த ஆட்சி முறை மாற்றம் புதிய அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஆட்சியாளர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த ஊழியர்களை இடைநிறுத்திய இ.போ.ச

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த ஊழியர்களை இடைநிறுத்திய இ.போ.ச

 மாகாணசபைத் தேர்தல் 

பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்தியத் தலைவர்களுடன் நடத்திய எந்தவொரு கலந்துரையாடலிலும் இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பு மாற்றம் குறித்து குறிப்பிட்டதாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

சமஷ்டி கோரிக்கைக்காக முன்னிற்கும் சுமந்திரன் | Sumanthiran Continues To Push For Federalism

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், இலங்கையின் அரசியலமைப்பின் படி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளின் அரச தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் டிசம்பர் 4ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு மற்றும் வடக்கு, கிழக்கு மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது.

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதை எங்கள் கட்சியின் நிலைப்பாடாக கூறினோம் என ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

சமஷ்டி கோரிக்கைக்காக முன்னிற்கும் சுமந்திரன் | Sumanthiran Continues To Push For Federalism

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள நிலைப்பாட்டை புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் போது ஆராய முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டிருந்தார். 

அதேவேளை, இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை தயாரிப்பின் போது ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி கட்டமைப்பை வலியுறுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலையீட்டுடன் வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் ஒற்றையாட்சியையும் பௌத்த மதத்தின் முதன்மையையும் பாதுகாக்கும் மைத்திரி - ரணில் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை இலங்கையின் புதிய அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்வதற்கான விருப்பத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவை வந்தடைந்த மியன்மார் அகதிகள்

முல்லைத்தீவை வந்தடைந்த மியன்மார் அகதிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US