முல்லைத்தீவை வந்தடைந்த மியன்மார் அகதிகள்
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டுப் படகொன்று கரையொதுங்கியுள்ளது.
அந்தப் படகில் 102 மியன்மார் நாட்டு பிரஜைகள் உள்ளதாகவும், இதில் 35 பேரளவில் சிறுவர்களெனவும், கற்பிணித் தாய்மார்கள், முதியவர்களும் அதில் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கப்பலில் இருந்த அகதிகளை அப்பகுதி கடற்றொழிலாளர் சங்கத்தினருடன் இணைந்து படகில் சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது, உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டது.
கடற்படை படகு
மேலும், முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர் ஆகியோரும் கரையொதுங்கிய அகதிகளின் நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டனர்.

இவர்களை திருகோணமலையில் இருந்து கடற்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல் - சிவா மயூரி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan