அமெரிக்காவிலிருந்து சுமந்திரன் சுமந்து வரப்போவது என்ன?

America Sri lanka Sumanthiran Tamil People A country is a law
By Dias Nov 21, 2021 03:48 PM GMT
Report
Courtesy: தி.திபாகரன்.M.A.

 “ஒரு நாடு ஒரு சட்டம் ஒரு மக்கள்” என இலங்கை ஜனாதிபதி கோட்டாபயய ராஜபக்ஷ கடந்த மாதம் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு நீதியான எந்தத் தீர்வையும் சிங்கள அரசு வழங்க தயாரில்லை என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து இலங்கையின் இனப்பிரச்சனை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைபை அமெரிக்கா பேச அழைத்துள்ளது. இங்கு திரு. சுமந்திரன் அமெரிக்காவுக்கு செல்வதன் மூலம் அவரை ஒரு சக்தி வாய்ந்த இராஜதந்திரி போன்ற பிரமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எல்லோரும் ஏறிய சிங்களப் பௌத்த இராஜதந்திரம் என்ற குதிரையில் அமெரிக்கா என்கின்ற சக்கடத்தாரரும் ஏறி அமர்ந்துவிட்டார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏனைய இருவரும் பயணம் செய்திருக்கின்றனர் . இவர்கள் அங்கிருந்து சுமந்து வரப்போவது என்ன என்ற கேள்வி இலங்கை அரசியற் தரப்பிலும் பலமாக எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழர் அரசியல் பரப்பில் பலதரப்பட்ட அக்கப்போர்கள் கிளம்பியிருக்கிறன. இப்பயணத்தின் பின்னணி பற்றி ஆழமாக நோக்க வேண்டியது அவசியமாகும்.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் தலைவர்களின் தலைகளில் கொண்டையும் போட்டு பூவும் கட்டிய சிங்களத் தலைவர்களின் இராஜதந்திரமானது அமெரிக்காவில் வைத்து சுமந்திரனுக்கு ஓட்டைப் பானையில் பால் வார்க்கும் வித்தையை அரங்கேற்று என்பதே நிச்சயமானது.

கடந்த நூறு ஆண்டுகளில் தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள அரசியல் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளையும், தேநீர் விருந்து உபசாரங்களையும், துாசிதட்டி மீட்டுப் பார்ப்பதுவும், கடந்தகால பட்டறிவை நினைவூட்டுவதும் இங்கு அவசியமாக உள்ளது.

சிங்களத் தலைவர்கள் சேர்.பொன்.இராமநாதனுடன் பேசி, கூடிக் குலாவி, விருந்துண்டு இராமநாதன் பிடித்த இந்து-பௌத்தம் இரண்டும் இணைந்த கல்வி நிறுவனம் என்ற பிள்ளையாரை குரங்காக மாற்றி வெற்றிகரமாக பௌத்த கல்வி நிறுவனம் அமைப்பதில் போய் முடித்து வைத்தார்கள். சேர் பொன். அருணாசலம் சிங்கள தலைவருடன் பேசி இராப்போசன விருந்து உண்டு அவருக்கு பால் சோறு கொடுத்து நயவஞ்சமாக அவரை ஏமாற்றி இறுதியில் அவரை துறவறம் பூண்டு காசிக்கு அனுப்பினார்கள்.

வைத்திலிங்கம் துரைசாமி போன்றோருடன் சம உரிமை தருகிறோம் என்று பேசிப்பேசி யாழ்ப்பாணம் வரை வந்து அவரின் மகேந்திர வாசம் என்ற வீட்டின் நடுவில் உட்கார்ந்து 1926ல் "மகேந்திரா ஒப்பந்தம்" என்ற நாடகத்தை ஆடி அதனை குறுகிய காலத்தில் காற்றில் பறக்கவிட்டனர்.

சட்ட வல்லுனர் ஜி.ஜி.பொன்னம்பலத்தை டி.எஸ்.சேனநாயக்கா அரவணைத்து அமைச்சுப் பதவியும் கொடுத்து கூடிக் குலாவி மலையகத் தமிழர்களின் வாக்கு உரிமையை பறிக்கும் சட்டமூலத்தை எதிர்க்காமல் அதாவது இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்ய வைத்ததன் மூலம் மிகத் தந்திரமாக அந்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றினர். 

அரசியலில் ஒரு சட்டத்தை இயற்றிவிட்டால் மட்டும் போதாது. அதனை சட்ட அமுலாக்கம் செய்வதில் தான் அந்த சட்டத்திற்கான பெறுமதியும், கனதியும், பயனும் உள்ளது. அந்த வகையிற்தான் பொன்னம்பலத்தை கபினேட் அமைச்சராக வைத்துக்கொண்டு இந்திய வம்சாவளி மக்களிற்கு எதிரான வாக்குரிமை மற்றும் குடியுரிமைச் சட்டங்களை திறம்பட அமுலாக்கம் செய்வதில் சிங்கள இராஜதந்திரம் தொடக்கத்திலேயே வெற்றிகளை முதலில் ஈட்டிக்கொண்டது .

அத்தோடு நின்றுவிடாமல் மந்திரி பதவியின் மூலம் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தை அணைத்து வைத்துக்கொண்டு தமிழர் தாயகத்தின் கிழக்கு மாகாணத்தை சிங்களக் குடியேற்றங்களால் கபளீகரம் செய்தது . அதன் மூலம் தமிழர் தாயகத்தை இரண்டாக வெட்டிப் பிளந்து பட்டிப்பளை ஆற்றினை கல்லோயா என சிங்களப் பெயராக மாற்றி சிங்கள மக்களை குடியேற்றி அம்பாறை மாவட்டத்தை கபளீகரம் செய்வதில் போய்முடிந்தது.

தந்தை செல்வாவை அரவணைத்து பண்டா-செல்வா ஒப்பந்தத்தை மேற்கொண்டு இறுதியில் ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க கிழித்தெறிந்து தந்தை செல்வாவின் நெற்றியிலேயே ஒரு பெரிய நாமத்தை இட்டுச் சென்றார்.

அடுத்து தந்தை செல்வாவுடன் டட்லி சேனாநாயக்க டட்லி-செல்வா ஒப்பந்தம் என்ற ஒன்றை செய்து கொண்டார். அதனூடாக “பசுமை புரட்சி” என்பதன் மூலம் கிழக்கில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களை ஸ்தாபிதம் அடையச் செய்வதில் டட்லி சேனாநாயக்க வெற்றி பெற்றார்.

சிங்களத் தலைவருடன் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து பேசிப்பேசி களைத்துப்போய் தமிழ்த் தலைவர்கள் ஓய்ந்து போய்க்கிடக்க, அதனிடையே சிங்கள இராஜதந்திரம் முதலாம் குடியரசு யாப்பை உருவாக்கியதன் மூலம் பௌத்தம், சிங்கள மொழி ஆகிய இரண்டுக்கும் முன்னுரிமை கொடுக்கின்ற அரசியல்யாப்பு உருவாக்கி நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றது.

சிங்கள அரசாங்கத்தின் எதிர்க்கட்சி ஆசனத்தில் திரு. அமிர்தலிங்கம் அமர்ந்திருந்த பொழுது மாவட்ட சபை என்ற பப்பா மரத்தில் அவரை ஏற்றி இறுதியில் பப்பா மரத்திலிருந்து அவர் குப்புற முறித்து விழுத்தியதில் போய் முடிந்தது.

அத்தோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் 1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலையை நிகழ்த்தியும் முடித்தனர். அதன் பின்னும் சர்வகட்சி மாநாடு என்ற மாயமானை ஓடவிட்டுக் காட்டி தமிழ் அரசியல் தலைவர்களை அலைக்கழித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைய இந்தியாவின் அழுத்தத்தை மடைமாற்றுவதற்கும், போராளிக் குழுக்களை அலைக்கழிப்பதற்கும், தம்மைத் தயார்படுத்துவதற்கும் தந்திரமாக பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை தொடக்கி வைத்தனர். அதன் ஆரம்பம் தான் “திம்புப் பேச்சுவார்த்தை” இலங்கை இனப்பிரச்சனைக்கான பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்த மறுத்த சிங்கள பௌத்த அரசு, அதனை இந்து அல்லாத ஒரு பௌத்த நாட்டில் தான் நடத்துவோம் என அடம் பிடித்தனர். அதன் விளைவு தான் பூட்டான் என்ற பௌத்த நாட்டின் தலை நகரான திம்புவில் பேச்சுக்கள் நடத்தப்பட்டன என்பதும் இங்கே கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய விடயம். இதன் மூலம் தனது இந்திய எதிர்ப்பு வாதத்தை இலங்கை இராஜதந்திரம் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழ் அரசியல் தலைமைகளும் கூடவே இந்தியாவும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஏமாற்றத்தை சந்தித்தனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்த இந்தியாவையும், ஈழத்தமிழர்களையும் ஒருவரோடு ஒருவர் மோதவிடத்தக்க வகையில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை கையாண்டு அதில் தனது இரண்டு எதிரிகளான இந்தியாவையும் ஈழத்தமிழரையும் மோதவிட்டு பிரித்து வைப்பதில் சிங்கள ராஜந்திரம் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை ஈட்டியது. அந்த வெற்றியின் அடித்தளத்தை தனது இருப்பாக வைத்துக்கொண்டு அதன் மீது ஏறி தொடர்ந்து வந்த பேச்சு வார்த்தைகள் யாவற்றையும் சிங்கள அரசு தனக்குச் சாதகமாக இலகுவாகவே மாற்றிக் கொண்டது.

இறுதியில் இந்தியாவிற்கு அப்பால் ஐரோப்பிய நாடான நோர்வேயை இலங்கை இனப்பிரச்சனைக்கு மத்தியஸ்தராக அழைத்து தமிழர் தரப்பை ஓஸ்லோ, டோக்கியோ என உலக நாடுகள் முழுவதும் அலைக்கழித்து ஈற்றில் முள்ளிவாய்க்காலில் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை சிங்கள அரசு அரங்கேற்றியது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்த போது ஆட்சிமாற்றம் என்ற போர்வையில் மேற்குலக அனுசரணையுடன் புதிய சட்டியில் பழைய கஞ்சியை ஊற்றி “நல்லாட்சி”அரசாங்கத்தை அமைத்து ஐந்து வருடங்களாக இனப்படுகொலை இராணுவத்தை தூய்மைப்படுத்துவது, போர்க்குற்றம் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதிலிருந்து இலங்கை அரசை பாதுகாப்பது என்பதில் வெற்றி பெற்றது.

இங்கும் மேற்குலகம் எந்தப் பயனையும் தமிழ் மக்களுக்கு காட்டவில்லை .தமிழர் தரப்பு ஒரு குண்டு மணியைத்தானும் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக சிங்கள அரசு விரும்புகின்ற சீன அரசை இலங்கையில் நிலைபெறச் செய்துவிட்டது. இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்ககூடிய வகையில் அம்பாந்தோட்டை   துறைமுகம் சீனாவுக்கு 99 வருடக் காலக் குத்தகைக்கு கொடுப்பதிலும் போய் முடிந்திருக்கிறது.

அத்தோடு நின்றுவிடாமல் அக்காலப்பகுதியில் சமஸ்டி தீர்வு பற்றி அறிவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை ஸ்கொட்லாந்துக்கு வழியனுப்பி ஸ்கொட்லாந்தில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு விருந்துண்டு சமஸ்டி முறைமையை நடைமுறையில் நன்கு புரிந்துகொண்டு இதோ சமஸ்டி கிடைத்துவிட்டது என்று இலங்கைக்குச் சென்ற தருணத்தில் நல்லாட்சி அரசாங்கம் இந்து சமுத்திரத்தில் புதைக்கப்பட்டுவிட்டது.

இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போன்று தனது வழக்கமான பாணியில் குள்ள நரித்தனமான சிங்களக் குதிரையில் அமெரிக்காவை சவாரி செய்ய குதிரைப் பாகன் பசில் ராஜபக்ஷ ஏற்பாடுகளை செய்த பின்னணியில் அந்தச் சிங்களக் குதிரை பின்னே ஓடும் சுமந்திரன் அணி அமெரிக்காவிலிருந்து பெரும் தீர்வுப் பொதிகளைச் சுமந்து வரப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்தளம் தட்டுகிறது. “எல்லோரும் ஏறிய குதிரையில் சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தார்” என்ற பெயரை அமெரிக்காவின் நெற்றியில் சிங்கள ராஜதந்திரம் குத்தபோகின்றது என்பது ஒருபுறமிருக்க மறுபுறம் ஓட்டைப் பானையில் சுமந்திரன் பால்வாங்கி வரப்போகிறார் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு தங்கள் வாயை திறந்து நாக்கை நீட்டிக் காட்டுகின்றனர். 

தி.திபாகரன்.M.A.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் மேற்கு, Scarborough, Canada

01 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், செம்பியன்பற்று

29 Mar, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஒலுமடு மாங்குளம், யாழ் நயினாதீவு 8ம் வட்டாரம், Jaffna, Harrow, United Kingdom

09 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

29 Mar, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

27 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், கொழும்பு

28 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

27 Feb, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், யாழ்ப்பாணம்

27 Mar, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு

25 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், Mississauga, Canada

09 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, நவக்கிரி, Scarborough, Canada

26 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கனடா, Canada

27 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Markham, Canada

09 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நவாலி, வட்டக்கச்சி

26 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரெழு, உரும்பிராய் கிழக்கு

28 Feb, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Aulnay-sous-Bois, France

24 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Ajax, Canada

26 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US