போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக சுமந்திரன் கண்டனம்(Video)

Colombo Sri Lankan protests Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Anti-Govt Protest
By Erimalai Jul 28, 2022 02:22 PM GMT
Report

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று(28) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,”நாட்டில் இன்று பொதுமக்கள் மீது மோசமான அடக்குமுறைகள் அரசாங்கத்தினாலே பிரயோகிக்கப்படுகின்றன.

ஆர்ப்பாட்டமொன்று 3,4 மாதங்களாக வன்முறையற்ற ரீதியில் நடைபெற்று மிகப்பெரிய அரசியல் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.


இந்த ஆர்ப்பாட்டங்களை பார்க்கின்றபோது உலகத்திலே இல்லாதளவிற்கு மிகவும் நேர்த்தியாக, வன்முறை பிரயோகிக்காமல் இந்த நாட்டை சூரையாடிய ராஜபக்ச குடும்பத்தினரை முற்றுமுழுதாக அப்புறப்படுத்துவதிலே இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வெற்றியடைந்துள்ளனர்.

முறைப்பாடு

இந்த ஆர்ப்பாட்டத்தை செய்தபோது இவர்களுக்கு உறுதுணையாக நாட்டில் பல பாகங்களிலிருந்தும் மக்கள் திரண்டுவந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விசேடமாக தலைநகரில் நடுத்தரவர்க்கத்தினர் அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டனர்.

ஆனால் இன்றைக்கு அதே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். அவர்களை பாதுகாக்க முன்வருவதற்கு பலர் தயங்குகிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பாக நேற்று(27) நாடாளுமன்றத்தில் அரசு தரப்பிலே உரையாற்றிய அனைவரும் கூறிய ஒரே விடயம் அங்கிருந்து அமைதியான முறையில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வந்த நிலையில் பிறகு அண்மையிலே வந்தவர்கள் சிலர் அதனை கைப்பற்றிவிட்டார்கள்.

அவர்களை தான் நாம் கைது செய்துள்ளோம் என்றெல்லாம் சொல்கின்றார்கள். உண்மையிலேயெ ஆரம்ப நாட்களிலிருந்து நேர்த்தியாக நடத்தியவர்களை அடையாளங்கண்டு அவர்களை கைது செய்வதில் மும்முரமாக உள்ளனர்.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக சுமந்திரன் கண்டனம்(Video) | Sumandran Hopes Prevent The Jailing Of The Rebel

இதில் விசித்திரமான ஒரு விடயம் என்னவென்றால் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதில் இவ்வளவு கவனம் செலுத்துகின்ற பொலிஸார் நாட்டிலே நடைபெறுகிற பலவிதமான அத்துமீறல்கள், கொலைகள், கொள்ளைகள், அதை விட நாட்டின் சொத்துக்களை சூறையாடியவர்கள் என பலர் இங்கு உள்ளனர்.

இவ்வாறானவர்களை நாட்டு மக்கள் அப்புறப்படுத்தியிருந்தாலும் பொலிஸாராலோ, நிர்வாகத்தினராலோ இப்போதுவரை அவர்களை கைது செய்ய முடியவில்லை.

ஆகவே மிகவும் நேர்த்தியாக, வரவேற்கத்தக்க விதத்திலே ஒரு பாரிய புரட்சியை ஏற்படுத்தி நாட்டு மக்கள் விரும்பிய மாற்றத்தை கொண்டு வந்தவர்களை இன்று பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களை கைது செய்ய முனைவது மிகவும் மோசமான ஒரு செயற்பாடு.

மக்களுக்கு அழைப்பு

போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக சுமந்திரன் கண்டனம்(Video) | Sumandran Hopes Prevent The Jailing Of The Rebel

நாட்டு மக்களுக்கு நாங்கள் ஒரு அழைப்பு விடுக்கிறோம். உங்கள் சார்பாக இந்த போராட்டத்தை நடத்தியவர்கள், நாட்டை சூறையாடியவர்களை அப்புறப்படுத்தியவர்கள் அடக்குமுறைக்கு உட்படுவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும்.

எங்கள் சார்பாக எங்கள் நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக இந்த கொள்ளை கும்பலை அடித்து விரட்டிய இந்த ஆர்ப்பட்டக்காரர்களை பாதுகாக்கும் பொறுப்பு இப்பொழுது எங்கள் ஒவ்வொருவரது கையிலும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்களுடன் தொடர்புடைய புதிய அரசாங்கம்! ஆபத்தினை எதிர்கொள்ளும் இலங்கை அரசியல்: எச்சரிக்கும் பிட்ச் தரப்படுத்தல்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US