ஜேவிபியினரை சாடியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்பு
முந்தைய அரசாங்கத்தில் இருந்த ஆட்சியாளர்களை விட ஜே.வி.பி அரசாங்கமானது மிகவும் மோசமானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
அராலியில் நேற்றைய தினம் (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "மக்கள் விடுதலை முன்னணியினுடைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தமிழ் மக்களுக்கு சார்பாக ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட எந்தப் பிரேரணைகளையோ, போர் குற்ற விசாரணைகளையோ அல்லது இனப்படுகொலை விசாரணைகளையோ நாங்கள் முன்னெடுக்க மாட்டோம். இது ஆச்சரியமான ஒரு விடயம் அல்ல.
ஆனால், மக்கள் விடுதலை முன்னணிக்கும், தேசிய மக்கள் சப்திக்கும் பின்னால் செல்லுகின்ற தமிழர்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியினுடைய கடந்தகால செயற்பாடுகளை எமது மக்கள் மிகத் தெளிவாக உணர வேண்டும். இல்லாவிட்டால் பானையில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக தமிழர்களுடைய எதிர்காலம் சூனியம் ஆகிவிடும்” என கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,