சுஜீவ சேனசிங்க அவமானப்படுத்திய பெண் உறுப்பினர்
ஹிருணி விஜேசிங்க எம்.பியிடம் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சுஜீவ சேனசிங்க மன்னிப்புக் கோரவேண்டும் என லக்மாலி எம்.பி நாடாளுமன்றில் இன்று (12.11.2025) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் நான்காம் நாள் விவாதத்தில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுஜீவ சேனசிங்கவின் பேச்சு
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த திங்கட்கிழமை சுஜீவ சேனசிங்க எம்.பி ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவை விழித்து உரையாற்றும் போது, அருகில் அமர்ந்திருந்த ஹிருணி விஜேசிங்க எம்.பியின் பெயரை குறிப்பிட்டு வெளிநாட்டுக்கு அழைத்து செல்வார் என குறிப்பிட்டார்.

இது ஒரு பெண் உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையிலான கருத்தாகும் என்பதால் அதை அன்சாட்டில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சுஜீவ சேனசிங்க எம்.பி இதற்கு நேரடி மன்னிப்பு கோர வேண்டும்.
சமூக ஊடகங்களில் கேலிக் கூத்தாக்கம்
அவரின் அந்த குறிப்பிட்ட வார்த்தை அடங்கிய காணொளி மட்டும் எடுக்கப்பட்டு,சமூக ஊடகங்களில் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் பெண் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய மரியாதை மறுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் நாடாளுமன்றத்தில் அரசியல் செய்வதற்கே வந்துள்ளோம். மக்களே எம்மை தெரிவு செய்துள்ளனர். எதிர்க்கட்சியில் இருக்கும் பெண் உறுப்பினர்களுக்கு இவர் இவ்வாறு வார்த்தை பிரயோகங்கள் செய்வதென்றால், அவரின் கட்சியில் இருக்கும் பெண் உறுப்பினர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam