சுஜீவ சேனசிங்க முன்பிணை கோரி மனுத்தாக்கல்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க(Sujeewa Senasinghe), தான் கைது செய்யப்படுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளும் நோக்கில் முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த நவம்பர் 25ம் திகதி சுஜீவ சேனசிங்கவின் வீட்டைச் சோதனையிட்ட பொலிசார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த V8ரக ஆடம்பர வண்டியொன்றை மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துச் சென்றிருந்தனர்.
விசாரணை
ஆரம்பத்தில் குறித்த வண்டி சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட வாகனமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார், அதன் பின் குறித்த வண்டி சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட வண்டி என்பதை உறுதி செய்து கொண்டிருந்தனர்.
பின்னர் தற்போது குறித்த வண்டியின் முன்னைய உரிமையாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்காவின் போலியான கையொப்பத்துடன் வண்டியின் உரிமை மாற்றப்பட்டுள்ளதாக புதியதொரு குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் அதுவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பது நிரூபணமாகியுள்ளது.
முன்பிணை
எனினும் குறித்த V8ரக வண்டி தொடர்பான குற்றச்சாட்டு ஒன்றில் தன்னைக் கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிசார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதில் இருந்து தவிர்ந்து கொள்ள தனக்கு முன்பிணை வழங்குமாறும் சுஜீவ சேனசிங்க, சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ ஊடாக கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனு மீதான விசாரணை எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான ஆட்சேபங்களை அன்றைய தினத்துக்கு முன்னதாக பதிவு செய்யுமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri
