உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை நீக்கம் செய்ய ஆலோசனை
கடந்த ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை நீக்கம் செய்ய அரசாங்க உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அமைச்சர் பந்துல குணவர்த்தன(Bandula Gunawardane)குறித்த தகவலை நேற்று(14) வெளியிட்டுள்ளார்.
புதிய வேட்பு மனுக்கள்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைத்திருப்பதன் காரணமாக குறித்த வேட்பு மனுக்களை நீக்கம் செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் புதிய வேட்பு மனுக்கள் கோரப்பட்டு, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி சாதகமான முடிவொன்றை எட்டுமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |