ரில்வின் சில்வா கைது செய்யப்படுவாரா... சுகீஸ்வர பண்டார முறைப்பாடு!
மக்கள் விடுதலை முன்னணியின் (jvp) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை கைது செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி புதிய மக்கள் முன்னணி (நவ ஜனதா பெரமுன) நிலக்கரி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
தங்கல்லையில் நடைபெற்ற மே தின பேரணியில் அவர் ஆற்றிய உரை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி சிறுவர்கள் நெஞ்சில் பிரிவினை விசத்தை விதைக்கிறது....கம்மன்பில கிளப்பும் சர்ச்சை
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்
அந்த உரையின் மூலம் டில்வின் சில்வா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கும் அதன் உறுப்பினர்களான நீதியரசர்களுக்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு டில்வின் சில்வாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி நேற்று முன்தினம் (14.05.2026) இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுக்கான கடிதம் நிலக்கரி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுகீஸ்வர பண்டார குறிப்பிட்டுள்ளார்.