சீனியின் விலை உயர்த்தப்படக்கூடிய சாத்தியம்
சீனியின் விலை உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் சீனி இறக்குமதியை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாகவும் இதனால் சீனியின் விலை உயரக் கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது எனவும் தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்கள் கடந்த 22ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்படுவதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி எஸ் கருணாரட்ன அறிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் காரணமாக சுமார் நாற்பது அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொண்ட சீனி இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்படவிருந்த இரண்டு லட்சம் மெற்றிக் தொன் எடையுடைய சீனி இறக்குமதி இடைநிறுத்தப்படும் என ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுப் பணியகத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் டொலருக்கான கையிருப்பு பிரச்சினையினால் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
சீனி இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதனைத் தொடர்ந்து வெள்ளை மற்றும் சிவப்பு சீனியின் மொத்த விற்பனை விலைகளை சில மொத்த வியாபாரிகள் உயர்த்தியுள்ளனர்.
இனி வரும் நாட்களில் சீனியின் சில்லறை விற்பனை விலை உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அந்த தெற்கு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri