சீனி இறக்குமதி! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
இலங்கையின் சந்தைகளில் குறைந்த விலையை உறுதிப்படுத்துவதற்காக லங்கா சதோச மற்றும் கூட்டுறவு திணைக்களத்தின் மத்தியஸ்தத்துடன், பருப்பு மற்றும் வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பருப்பு மற்றும் வெள்ளை சீனி என்பன உள்ளூர் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து குறித்த இரண்டு பொருட்களையும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் COVID-19 தொற்று சூழ்நிலைகளுக்கு மத்தியில், உள்ளூர் சந்தையில் பற்றாக்குறை இல்லாமல் அத்தியாவசியப் பொருட்களை கிடைக்கச் செய்ய வேண்டிய அவசியத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.