இன்னும் இரண்டு வாரங்கள் பார்ப்போம் என்கிறார் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி
பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தும் முன்னர் கோவிட் வைரஸ் தொற்றியவர்களே தற்போது அடையாளம் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்னும் ஒரு வார காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படலாம் எனவும்
கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்போது பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே கோவிட் பரவியது. வைரஸ் தொற்று காலம் என்பது இரண்டு நாட்களில் இருந்து 14 நாட்கள்.
14 நாட்களில் நோய் பரவ முடியும். பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் முன்னர் வைரஸ் தொற்றி இருந்தால், 14 நாட்களில் பரவ முடியும்.
அப்படியான நோயாளிகளே தற்போது அடையாளம் காணப்படுகின்றனர். காரணம் நாடு முடக்கப்பட்டு இரண்டு வாரங்களே ஆகின்றன.
இன்னும் இரண்டு வாரங்கள் பார்ப்போம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி குறிப்பிட்டுள்ளார்.
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri