ஜனாதிபதியின் ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்
பிரபல ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியராச்சி ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து ஜனாதிபதி செயலகத்தில் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதுடன் அடுத்த வாரம் பதவிக்கான பொறுப்புகளை ஏற்க உள்ளார்.
கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான சுதேவ ஹெட்டியாராச்சி, 25 வருடங்களுக்கு மேலாக சிங்கள ஊடகத்துறையில் பிரபலமான அறிவிப்பாளராக இருந்து வருகிறார்.
நிகழ்ச்சி தயாரிப்பாளர், பணிப்பாளர், பிரதான நிறைவேற்று அதிகாரி ஆகிய பதவிகளை வகித்துள்ள அவர், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படும் முன்னர் சிங்கள ஊடக வலையமைப்பொன்றில் பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றி வந்தார்.