கல்முனை மாநகர சபை எல்லையினுள் திடீர் களப்பரிசோதனை (Photos)
கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதையடுத்து மாநகர ஆணையாளரின் அறிவுறுத்தலின் பேரில் களப்பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இக்களப் பரிசோதனையில் மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ.வட்டபொல, வருமான பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து இறைச்சிக் கடைகளிலும் அதிரடியாக இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விலைப்பட்டியல் இல்லாதவர்களுக்கு எச்சரிக்கை
இதன்போது கட்டுப்பாட்டு விலை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாத இறைச்சிக் கடைகளில் புதிய விலைப்பட்டியலானது மாநகர சபை உத்தியோகத்தர்களினால் ஒட்டிவிடப்பட்டுள்ளன.
அத்துடன் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தத் தவறிய வியாபாரிகளுக்கு எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர சபை எல்லையினுள் ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கப்பட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென மாநகர ஆணையாளர் தலைமையில் இறைச்சிக் கடைக்காரர்களின் பங்கேற்புடன் திங்கட்கிழமை (03.04.2023) இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














இஸ்ரேலுக்கான வான்வெளியை மூடல்! அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்க முடிவு..அறிவித்த துருக்கி News Lankasri

அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்: வெளியான வீடியோ! News Lankasri
