யாழில் பல வியாபார மையங்களில் திடீர் சோதனை (Video)
யாழ். மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால், யாழ்ப்பாணத்தில் உள்ள பல வியாபார மையங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சோதனையில் வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகள் என்பன பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ள போது அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைகளத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 15 வியாபாரிகள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டில் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திடீர் பரிசோதனை
இனிவரும் காலங்களில் நிறுவை அல்லது அளவை, நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணங்களை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தும் வியாபார நிலையங்களிலும் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
