நெடுங்கேணியில் வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சோதனை நடவடிக்கை
வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியிலுள்ள கடைகள் மற்றும் மரக்கறிகள் விற்பனை நிலையங்கள் மீது திடீர் சோதனை மேற்கொண்டதுடன், முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்கள் மீது சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டில் கோவிட்- 19 மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும்
நிலையில், வவுனியா வடக்கு பகுதியில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார
நடைமுறைகள் தொடர்பாக பொலிஸாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் நெடுங்கேணி பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் வீதியோர வர்த்தக நிலையங்கள், மரக்கறிக் கடைகள், பழக்கடைகள் என்பவற்றைப் பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் அங்கு சுகாதார நடைமுறைகளைப் பேணாதோர், முகக்கவசம் அணியாதோர், முகக்கவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளைப் பதிவு செய்ததுடன், பொலிஸாரால் குறித்த நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சுகாதார நடைமுறைகளை மீறிய ஐந்து கடைகள் உடனடியாக பூட்டப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸாரால்
சுகாதார அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
