ஏறாவூரில் தீவிர சோதனை: தடைசெய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் சிக்கிய 7 பேர்
மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மைலம்பாவெளியில் வாகனங்களை நிறுத்தி பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களை தேடி நேற்று (06.01.2024) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 2186 தடை செய்யப்பட்ட சிகரெட்டுக்களை கடத்திச் சென்ற 7 பேரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது பேருந்துகளில் இருந்த அனைத்து பயணிகளையும் இறக்கி அவர்களையும், அவர்களது உடமைகளையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri