அம்பாறையில் திடீர் சோதனை! 100 பேருக்கு எதிராக நடவடிக்கை
அம்பாறையில் இன்று விசேட போக்குவரத்து பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கல்முனை, சாய்ந்தமருது பிரதான சந்தி வீதிகள் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் மதியம் வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸார் குழுக்களாக பிரிந்து கல்முனை, சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முக்கிய சந்திகள் மற்றும் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
வீதி ஒழுங்குமுறை மீறல்கள்
இத்திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார்சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கையின் போது 100 இற்கும் மேற்பட்டோருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
