இலங்கை முழுவதும் திடீர் மின் தடை.!
புதிய இணைப்பு
மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.
இன்று காலை மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட சமச்சீரற்ற காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், மின்சாரம் முழுமையாக வழமைக்கு திரும்புவதற்கு பல மணிநேரம் ஆகும் என்று உதயங்க ஹேமபால மேலும் தெரிவித்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
நேரம் - 11: 26 - நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் சில பகுதிகளிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக வியாபார நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையை சரிசெய்வதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த திடீர் மின்தடைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு முயற்சிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறும் மின்சார சபையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri