கனடாவில் தமிழர் விவகாரங்களில் அதிகரிக்கும் இலங்கை அரசின் திடீர் தலையீடுகள்
கனடா - பிராம்டன் நகரசபைக்குட்பட்ட பகுதியில் தமிழின அழிப்பை நினைவுகூரும் வகையில் அமைக்கப்படவுள்ள தூபி தொடர்பில் கனடாவில் உள்ள இலங்கை தூதரகம் தனது கடும் கண்டனத்தை பிராம்டன் நகரசபைக்கு தெரிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த மாதம் இடித்தழிக்கப்பட்ட நிலையில் உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் தமிழர்கள் தங்களது எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், கனேடிய பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்ராரியோ முதல்வர், பிரதான நகரங்களின் நகரபிதாக்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் என பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கனடாவில் அதிகமாக தமிழ் மக்கள் வாழும் பகுதியான பிராம்டன் நகரசபை ஏகமனதான தீர்மானம் ஒன்றின் ஊடாக பூங்கா ஒன்றில் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் நினைவுத்தூபி ஒன்றை அமைக்க அனுமதி வழங்கியிருந்தது.
இதன்பின்னர், கனடாவில் உள்ள இலங்கை தூதரகம் குறித்த நகரசபைக்கு தனது கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளதோடு, இதற்கு எதிராக சிலரை களமிறக்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தமிழருக்கு என்று தனியாக ஒரு தூபி வேண்டாம் என்றும் தங்களையும் சேர்த்து சமாதானத்தூபி ஒன்றை அமைக்குமாறும் இலங்கைத் தூதரகத்தின் ஊடாக பிராம்டன் நகரசபைக்கு வேண்டுகோள் ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது, அக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழர் தாயகத்திலும் தங்களது இழப்புக்களை நினைவுகூருவதற்கு முட்டுக்கட்டைகளை இட்டு வரும் இலங்கை அரசு கனடாவிலும் அந்த முயற்சியை தொடர்வதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கனடாவில் அண்மைக் காலமாக தமிழர் விவகாரங்களில் இலங்கை அரசு சார்புடையவர்களின் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக அங்குள்ளவர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
